» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 23, மே 2025 4:06:13 PM (IST)
தூத்துக்குடியில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் வைத்து கடந்த 21.04.2025 அன்று திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த செந்தூர்பாண்டி மகன் தங்கராஜா (எ) ராஜா (28) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி S.S மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான மரிய சூசை ஸ்டாலின் மகன் சிலுவை ஆகாஷ் (எ) ஆகாஷ் (24), தாசன் மகன் நக்சன் (20),
லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் மரிய தாமஸ் டினோ (எ) டினோ (24), கீழ அலங்காரதட்டு பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் மைக்கேல் ஜோவின் (எ) ஜோவின் (19) ஆகிய 4 எதிரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் க. இளம்பகவத் உத்தரவின் பேரில் நேற்று வடபாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி துறைமுகத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம்!
வெள்ளி 20, ஜூன் 2025 5:13:36 PM (IST)

திருச்செந்தூர் கோட்டத்தில் நாளை மின்தடை அறிவிப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 5:05:59 PM (IST)

தந்தையை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை : தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
வெள்ளி 20, ஜூன் 2025 4:46:44 PM (IST)

கள் இறக்கிய சீமானை கைது செய்ய வேண்டும்: கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
வெள்ளி 20, ஜூன் 2025 4:02:32 PM (IST)

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி: அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நெல்லையிலிருந்து இயக்கம்
வெள்ளி 20, ஜூன் 2025 3:07:30 PM (IST)

அமைச்சர் டிஆர்பி ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்!
வெள்ளி 20, ஜூன் 2025 12:47:09 PM (IST)
