» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு : எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆய்வு
வெள்ளி 9, மே 2025 7:56:32 PM (IST)

தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பு நெறிமுறைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆய்வு செய்தார்.
தற்போது நிலவும் பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் அதிகரித்த எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டு, பல பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல அடுக்கு பயணிகள் மற்றும் ஊழியர்களிடம் சோதனை, உடமைகள் சோதனை, வாகன சோதனை மற்றும் பிற நாசவேலை தடுப்பு ஒத்திகைகளின் செயல்பாட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்தார்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டது. கூடுதல் ஆயுதமேந்திய விரைவு அதிரடி படைகள் மற்றும் அதிகப்படுத்தப்பட்ட பணியாளர்களின் செயல்பாடு குறித்து விரிவாக ஆராயப்பட்டது. விமான நிலைய எல்லைகள் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கூடுதல் ஆயுதமேந்திய ரோந்து காவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

அண்மையில் நடத்தப்பட்ட விமானக் கடத்தல் தடுப்பு ஒத்திகையின் கூறுகள் புதுப்பிக்கப்பட்டன. மேலும் தூத்துக்குடி விமான நிலையத்தின் பாதுகாப்பில் தீவிர கண்காணிப்பை தொடர்ந்து பராமரிக்க அறிவுறுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எல்லோருக்கும் எல்லாம் என்பதே திராவிட மாடல் ஆட்சியின் நோக்கம்: அமைச்சர் கீதா ஜீவன்
திங்கள் 9, மார்ச் 2026 10:26:43 AM (IST)

கட்டுமானப் பணியின் போது தவறி விழுந்தவர் உயிரிழப்பு!
திங்கள் 9, மார்ச் 2026 8:15:19 AM (IST)

வேன் மோதி பெண் தலைமைக் காவலர் காயம்!
திங்கள் 9, மார்ச் 2026 8:13:07 AM (IST)

மதிமுக மாநில நிர்வாகி அதிமுகவில் இணைந்தார்
திங்கள் 9, மார்ச் 2026 8:00:44 AM (IST)

சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கல்: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:44:39 PM (IST)

தூத்துக்குடியில் ஒரே நாளில் 5 பேர் குண்டர் சட்டத்தில் கைது!
ஞாயிறு 8, மார்ச் 2026 9:41:54 PM (IST)







