» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வீரசக்கதேவி ஆலய திருவிழா தாெடர் ஜோதி ஓட்டம் : அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
வெள்ளி 9, மே 2025 12:05:12 PM (IST)

பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் இருந்து தொடர் ஜோதி ஒட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டையில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் விழாவாகவும், வீரசக்கதேவி ஆலய திருவிழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 8ம் தேதி மாலையில் விழா தொடங்கியது.
இதைத் தொடர்ந்து வீரத்தக்கதேவிக்கு சிறப்பு அபிஷேகங்கள் தீபாரணைகள் நடந்தன. வீரசக்கதேவி ஆலய ஆண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு இடங்களில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. திருச்செந்தூரில் இருந்து பாஞ்சை நோக்கி செல்லும் தொடர் ஜோதி ஓட்டத்தை கட்டபொம்மன் மண்டபத்தில் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மதிமுக மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி தலைமை தாங்கினார். வீரசக்கதேவி ஆலய கமிட்டி துணை செயலாளர் முருகபூபதி வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஊமத்துரை தொண்டர் படை தலைவர் அஜித் ராஜா, செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் மணிகண்டன், மற்றும் உமரி சங்கர், வேல்ராஜ், மொட்டையசாமி, எம்.ராஜா, பொன்ராஜ், ஏ.ராஜா உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஜோதி அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, ஆத்தூர், பழையகாயல், முள்ளக்காடு, முத்தையாபுரம், தூத்துக்குடி கால்டுவெல் காலனி, 3 சென்ட், அந்தோணியார் புரம், வள்ளிநாயகபுரம் வழியாக கட்டபொம்மன் நகரை அடைந்தது. அங்கு ஜோதிக்கு ஆலய கமிட்டி துணை செயலாளர் முருகப் பூபதி தலைமையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் ஜோதி வீவிடி சிக்னல் அண்ணா நகர் புதிய பஸ் நிலையம் குறுக்குச்சாலை வழியாக பாஞ்சாலங்குறிச்சியை அடைந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









