» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

மளிகைக் கடைக்காரா் கொலை வழக்கில் 3பேர் கைது!

வெள்ளி 9, மே 2025 11:43:00 AM (IST)

தூத்துக்குடியில் மளிகைக் கடை உரிமையாளர் கொலை தொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முக்காணி குருவித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் மகன் பொங்கல்ராஜ் (43). இவர் முத்தையாபுரம் சுந்தர் நகரில் காய்கனி மற்றும் பல சரக்கு கடை வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் இவரை மர்ம நபர்கள்  கல்லால் கொலை செய்தனர். இது தொடர்பாக முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் கடந்த சில தினங்களுக்கு முன்னா் கோயில் திருவிழாவின்போது அங்கு பொங்கல்ராஜுக்கும் சிலருக்கும் தகராறு ஏற்பட்டது. இந்த முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடா்பாக முக்காணி குருவித்துறையைச் சேர்ந்த மாசானமுத்து மகன் புலமாட முத்து (32), மாரிமுத்து மகன் நாகராஜன் (19), சங்கர் மகன் ஜெயராஜ் (21) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital


CSC Computer Education






Thoothukudi Business Directory