» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை: தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 9, மே 2025 10:42:19 AM (IST)
தூத்துக்குடியில் தெப்பக்குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி சிவன் கோவில் அருகே தெப்பக்குளத்தில் சுமார் 10 அடி உயரம் தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை 7 மணி அளவில் ஒரு பெண் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அந்த பெண்ணின் சடலத்தை மீட்டனர். பின்னர் உடல் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார் என்று தெரியவில்லை அவருக்கு சுமார் 65 வயது இருக்கும். சிவப்பு சிற பூப்போட்ட சேலை அணிந்து இருந்தார். அவரது கழுத்தில் கவரிங் நகைகள் அணிந்து உள்ளார். தெப்பக்குளத்தில் பெண் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பஸ் பாஸ் வழங்கிட சிறப்பு முகாம் : ஆட்சியர் தகவல்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:20:33 PM (IST)

ஜன.14ம் தேதி அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் : முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 13, ஜனவரி 2026 8:08:26 PM (IST)

சுற்றுச்சுழலைப் பாதிக்காத வகையில் போகி பண்டிகை கொண்டாட வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:47:24 PM (IST)

நல்லாயன் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:36:12 PM (IST)

கோவில்பட்டியில் களைகட்டிய பொங்கல் விழா : இளவட்டக்கல் தூக்கி அசத்திய மாணவர்கள்!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:05:23 PM (IST)

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் கைது!
செவ்வாய் 13, ஜனவரி 2026 5:02:18 PM (IST)








