» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் படகில் பதுக்கிய 3 அரியவகை ஆமைகள் உயிருடன் மீட்பு!
வெள்ளி 9, மே 2025 8:38:48 AM (IST)

தூத்துக்குடியில் விற்பனைக்காக படகில் பதுக்கி வைத்திருந்த 3 அரியவகை ஆமைகளை வனத்துறையினர் மீட்டு வான்தீவு கடலில் பாதுகாப்பாக விட்டனர்.
தூத்துக்குடி கடல் பகுதி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பகமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு பல அரிய வகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இதில் சில உயிரினங்கள் வேகமாக அழிந்து வருவதால், அந்த உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
அதன்படி, ஆமைகளும் வேட்டையாடுவதற்கு தடை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி கடல் பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த பச்சை நிற ஆமைகள் காணப்படுகின்றன. இதனால் தூத்துக்குடி மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை சார்பில் தடை செய்யப்பட்ட கடல் ஆமைகளை பிடிக்கிறார்களா? என தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வனஉயிரின சரக அலுவலருக்கு தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே உள்ள கடற்கரையில் ஒரு படகில் கடல் ஆமைகள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனைக்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில், மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று அந்த படகை சோதனை செய்தனர். அந்த படகில் 3 அரிய வகையைச் சேர்ந்த பச்சைநிற ஆமைகள் வலைக்குள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன.
ஒரு ஆமை சுமார் 5 அடி நீளமும், 250 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. மற்ற ஆமைகள் தலா 80 கிலோ, 30 கிலோ எடை கொண்டதாகவும் இருந்தது. உடனடியாக அதிகாரிகள் 3 ஆமைகளையும் பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர் உரிய பரிசோதனைக்கு பிறகு 3 ஆமைகளையும் படகில் ஏற்றி வான்தீவு பகுதியில் உள்ள கடலில் பாதுகாப்பாக விட்டனர். மேலும், படகில் விற்பனைக்காக ஆமைகளை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் வீட்டு கதவை உள்புறம் பூட்டிக் கொண்ட சிறுவன் மீட்பு
சனி 15, நவம்பர் 2025 12:56:11 PM (IST)

கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)

தூத்துக்குடியில் எஸ்ஐஆர் சிறப்பு முகாம் : ஆட்சியர் ஆய்வு
சனி 15, நவம்பர் 2025 11:44:23 AM (IST)

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து பிறந்த நாள் விழா : தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சனி 15, நவம்பர் 2025 10:53:52 AM (IST)

கூலர் மெஷின் பழுது: விற்பனை நிறுவனத்திற்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவு!
சனி 15, நவம்பர் 2025 10:20:32 AM (IST)

கல்லூரி மாணவி தற்கொலை: போலீசார் விசாரணை
சனி 15, நவம்பர் 2025 8:24:28 AM (IST)









தூத்துகுடிகாரன்மே 9, 2025 - 09:24:54 AM | Posted IP 104.2*****