» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளஸ் 2 தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96.19% பேர் தேர்ச்சி : மாநில அளவில் 9வது இடம்
வியாழன் 8, மே 2025 10:11:42 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 96.19 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்துள்ளது.
தூத்துக்குடியில், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை வெளியிட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் து. கணேசன் மூர்த்தி கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவர்கள், 8,741 மாணவிகள் என 10.501 பேர் தேர்வு எழுதினர். மொத்தம் 19,242 தேர்வு எழுதினர். இதில் 8,229மாணவர்கள் 10,280 மாணவிகள் என மொத்தம் 18,509 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
94.14 சதவீதம் மாணவர்கள், 97.90 சதவீதம் மாணவிகள் என மொத்தம் 96.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்துள்ளனர் என்று தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கடந்த ஆண்டு 96. 39சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று மாநிலத்தில் 9வது இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 57 அரசு பள்ளிகளில் 15 பள்ளிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள 206 பள்ளிகளில் 80 சதவிதம் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








