» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோடை விடுமுறை: தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!
செவ்வாய் 15, ஏப்ரல் 2025 4:31:06 PM (IST)
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
- ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மே 11 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.
- வாரம்தோறும் திங்கள்கிழமை இயக்கப்படும் தாம்பரம் - நாகர்கோவில் - சிறப்பு ரயில் மே 12 முதல் ஜூன் 2 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
- வெள்ளிக்கிழமை மட்டும் செல்லும் தாம்பரம் - திருவனந்தபுரம் ரயில் மே 9 முதல் மே 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
- ஞாயிறு அன்று இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் ரயில் மே 11 முதல் ஜூன் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
- ஞாயிறு அன்று இயங்கும் திருநெல்வேலி - மேட்டுப்பாளையம் ரயில் சேவை மே 11 முதல் ஜூன் 1 வரையி நீட்டிக்கப்பட்டுள்ளது
- திங்கள்கிழமை இயங்கும் மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி ரயில் சேவை மே 12 முதல் ஜூன் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
