» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

காரில் வந்த தொழிலதிபர் திடீர் மரணம்: போலீஸ் விசாரணை

திங்கள் 14, ஏப்ரல் 2025 10:37:53 AM (IST)

வல்லநாடு அருகே காரை ஓட்டிவந்தபோது, தொழிலதிபர் திடீரென மயங்கி விழுந்து இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி சாந்தி நகரை சேர்ந்தவர் அழகு பாண்டியன் மகன் சுரேஷ் (52), தொழிலதிபரான இவருக்கு கீதா என்ற மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில் இவர் நேற்று வல்லநாட்டில் உள்ள ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். அங்கு ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் வல்லநாட்டில் இருந்து திருநெல்வேலிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

காரை சுரேஷ் ஓட்டி வந்துள்ளார். வல்லநாடு பாலம் வந்தபோது சுரேஷ் திடீரென நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு காருக்குள் மயங்கிவிட்டாராம். இதையடுத்து அவரது மனைவி 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முறப்பநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education



Arputham Hospital




Thoothukudi Business Directory