» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

பெரியதாழை மற்றும் புத்தன்தருவை பகுதிகளில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ரோந்து மேற்கொண்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் நேற்று (25.03.2025) தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரியதாழை மற்றும் புத்தன்தருவை கடற்கரை பகுதி ஆகிய இடங்களுக்கு ரோந்து மேற்கொண்டு அங்குள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், சந்தேகப்படும்படியாக அந்நிய நபர்கள் ஊருக்குள் சுற்றித்திரிந்தாலோ அல்லது சட்ட விரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டாலோ காவல்துறையினருக்கு தயங்காமல் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வின் போது சாத்தான்குளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சுபகுமார் உட்பட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத் பகுதியில் புனித வெள்ளி பிரார்த்தனை: சபை மக்கள் திரளானோர் பங்கேற்பு.
வெள்ளி 18, ஏப்ரல் 2025 8:35:03 PM (IST)

பெண்ணிடம் அத்துமீறியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 5:13:27 PM (IST)

ரேஷன் கடைகளில் புளுடூத் இணைப்பை நீக்க வேண்டும் : விற்பனையாளர்கள் கோரிக்கை!
வெள்ளி 18, ஏப்ரல் 2025 4:50:08 PM (IST)

திருச்செந்தூரில் ரூ. 30 கோடி மதிப்பீட்டில் கடல் அரிப்பை தடுக்கும் பணி; அமைச்சர் சேகர்பாபு தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 3:19:07 PM (IST)

திமுக இளைஞர் அணி சமூகவலைதள பயிற்சிக் கூட்டம் : அமைச்சர் கீதாஜீவன் தகவல்
வெள்ளி 18, ஏப்ரல் 2025 12:14:34 PM (IST)

பனிமய மாதா ஆலயத்தில் சிலுவைப்பாதை வழிபாடு : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
வெள்ளி 18, ஏப்ரல் 2025 11:41:31 AM (IST)
