» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சுகாதார ஆய்வாளர் தற்கொலை : பேரூராட்சி தலைவிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 13, மார்ச் 2025 11:22:40 AM (IST)
சுகாதார ஆய்வாளர் தற்கொலை விவகாரத்தில் பேரூராட்சி தலைவிக்கு எதிரான மனுவை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த தங்கம்மாள் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் கணவர் சுடலைமாடன் உடன்குடி பேரூராட்சியில் சுகாதார ஆய்வாளராக பணி க்ஷயாற்றினார். பதவி உயர்வு விவகாரத்தில் என் கணவரை சாதியை சொல்லி திட்டினர். இதனால், மனமுடைந்த எனது கணவர் விஷம் குடித்து கடந்த 2023ல் தற்கொலை செய்து கொண்டார்.
இதுதொடர்பாக குலசேகரபட்டினம் போலீசார், முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி, பேரூராட்சி நிர்வாக அதிகாரிபாபு உள் ளிட்டோர் மீது தீண்டாமை வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் இறுதி அறிக்கை தூத்துக்குடி தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் துவங்கியுள்ள நிலையில், சாட்சிகளுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது. இதனால் வழக்கு விசாரணை முறையாக நடக்க வாய்ப்பில்லை. எனவே, தூத்துக்குடி நீதிமன்ற விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை திருநெல்வேலி நீதிமன்றம் அல்லது வேறு மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு மாற்றக் கோரிய மனு நிலுவையில் உள்ளது.
ஆனால், பேரூராட்சியின் தற்போதைய தலைவராக ஹூமாரியா ரமீஷ்பாத்திமா உள்ளார். இவர், முன்னாள் தலைவியின் உறவினர். இவரால் சாட்சியம் பாதிக்ககூடும். எனவே, அவர் மீது தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி விவேக்கு மா சிங், "மனுதாரர் கோரிக்கை குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், திருநெல்வேலி மண்டல பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் ஆகியோர் அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க உரிய வாய்ப்பளித்து மனுவை பரிசீலித்து 4 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தர விட்டு மனுவை முடித்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
புதன் 26, மார்ச் 2025 10:24:20 AM (IST)

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)
