» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்க வேண்டும்: இந்திய மாணவர் சங்கம் கோரிக்கை!
வியாழன் 13, மார்ச் 2025 8:36:32 AM (IST)

தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்கிட வேண்டும் என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.
"2025-2026 ம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் கல்விக்கான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்து, கல்வியின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், தூத்துக்குடி மாநகரில் அரசு கல்லூரி துவங்கிடவும் இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் கோ. அரவிந்தசாமி தலைமையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகர மையப்பகுதியில் அரசு கலைக் கல்லூரி இல்லாத ஒரே காரணத்தினால் நகரத்தில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகளில் பன்மடங்கு கட்டணங்களை உயர்த்தி வருகின்றனர். ஆகவே தூத்துக்குடி மாநகர் மையப் பகுதியில் கண்டிப்பாக அரசு கல்லூரி அமைத்திட வேண்டும் என்று வலியுறுத்தினர். இந்திய மாணவர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் சி.மிருதுளா, மாநில இணைச் செயலாளர் ரா.பாரதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
ABVPMar 13, 2025 - 11:32:22 AM | Posted IP 172.7*****
Pala varudangalaga ABVP intha korikkayai valiurithi varugirathu.... Arasu thoothukudiyil arasu kalai ariviyal kalloori thodanga pareselikkavendum.
ராமநாதபூபதிMar 13, 2025 - 10:07:06 AM | Posted IP 162.1*****
அருமையான நியாமான கோரிக்கை. அதே போல தூத்துக்குடியில் ஒரு அரசு மேல்நிலை பள்ளி இல்ல என்பது வருத்தத்துக்குரிய விஷயம். அதையும் வலியுறுத்தவேண்டும்
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
புதன் 26, மார்ச் 2025 10:24:20 AM (IST)

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

உண்மை விளம்பிMar 13, 2025 - 10:50:32 PM | Posted IP 162.1*****