» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஒரே நாளில் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
வியாழன் 13, மார்ச் 2025 8:26:16 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாளில் 4பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. இளம்பகவத் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சாத்தான்குளம் ஆர்.சி சர்ச் தெருவை சேர்ந்த மரியஜோசப் மகன் கிங்ஸ்டன் ஜெயசிங் (எ) வடை (23),
ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்து, பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த வழக்கில் சம்பந்தப்பட்ட குரும்பூர், ஓடக்கரை பகுதியை சேர்ந்த சங்கர் மகன் முத்துராமலிங்கம் (25),
கடம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இளம்பெண்ணை பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் சம்பந்தப்பட்ட கடம்பூர் அரண்மனை தெருவை சேர்ந்த சங்கிலிபாண்டியன் மகன் சுடலை கண்ணன் (39) மற்றும் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட தூத்துக்குடி 2ம் கேட் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராமலக்ஷ்மணன் (27) ஆகிய 4 பேரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:49:31 PM (IST)
