» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நெல்லை- திருச்செந்தூர் இடையே அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் 2 நிமிடம் நின்று செல்ல கோரிக்கை!

செவ்வாய் 11, மார்ச் 2025 3:08:26 PM (IST)



நெல்லை- திருச்செந்தூர் இடையே உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் 2 நிமிடம் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பயணியர் நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை-திருச்செந்தூர் இடையே பாசஞ்சர் ரயில்கள், எக்ஸ்பிரஸ் மற்றும் சூப்பர் பாஸ்ட் என பல்வேறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நெல்லை- திருச்செந்தூர் இடையே பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம். ஆழ்வார்திருநகரி, நாசரேத், கச்சனாவிளை, குரும்பூர், ஆறுமுகநேரி, காயல்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்கள் உள்ளன. இந்த அனைத்து ரயில் நிலையங்களிலும் ரயில்கள் 1 நிமிடம் மட்டுமே நின்று செல்கிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் வணிகர்கள் என அனைத்து தரப்பினரும் ரயிலில் அவசர, அவசரமாக ஏறி இறங்க வேண்டியுள்ளது. இதனால் ரயில் பயணிகள் அடிக்கடி தங்களுடைய உடைமைகளை தவறவிட்டு விடுகின்றனர்‌. மேலும் பயணிகள் வாசலில் ஒருவருக்கொருவர் நெறித்து தள்ளிக்கொண்டு அவசரமாக இறங்க வேண்டியுள்ளது.

இதுகுறித்து மாநில பயணிகள் நலச்சங்க தலைவர் சாந்தகுமார் கூறுகையில், நெல்லை-திருச்செந்தூர் மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் 1 நிமிடம் மட்டுமே ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதனால் பயணிகள், மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள், வயதானோர், ஊனமுற்றோர், கர்ப்பிணிகள் ஏறி இறங்க மிகவும் சிரமப்படுவதோடு பல இன்னல்களுக்கு ஆளாகி விடுகின்றனர். கூட்ட நெரிசல் நேரங்களில் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். 

எனவே பயணிகள், பொது மக்கள் நலன் கருதி நெல்லை- திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரயில்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் 2 நிமிடமாவது நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட தென்னக இரயில்வே அதிகாரிகள் அனைத்து ரயில் நிலையத்திலும் குறைந்த பட்சம் 2 நிமிடமாவது ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

செய்யதுஉமர்Mar 12, 2025 - 12:52:57 PM | Posted IP 172.7*****

முன்னாள் அமைச்சர் லல்லு பிரசாத் அறிவித்த இரட்டை வழிப்பாதை ரயில் பாதை எப்போது முடிவுக்கு வரும் மேலும் சென்னை கிழக்கு கடற்கரை சாலை வழியாக மகாபலிபுரம் பாண்டிச்சேரி காரைக்கால் பட்டுக்கோட்டை கீழக்கரை ராமநாதபுரம் சாயல்குடி தூத்துக்குடி ஆறுமுகநேரி காயல்பட்டினம் திருசெந்தூர் உடன்குடி திசையன்விளை வழியாக கண்ணியாகுமரிக்கு எப்போது ரயில் பாதை அமைக்கப்படும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






CSC Computer Education

New Shape Tailors

Arputham Hospital



Thoothukudi Business Directory