» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம்
திங்கள் 17, பிப்ரவரி 2025 8:20:58 AM (IST)

சென்னை தரமணி கணித அறிவியல் நிறுவனத்தில் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம் நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, பெங்களூரு இந்திய வான் இயற்பியல் நிறுவனம், சென்னை கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், ராமன் ரிசர்ச் பவுண்டேசன், ஆகியவை சார்பில் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டின் மாநில அளவிலான கருத்தரங்கம் 2 நாட்கள் சென்னை தரமணி கணித அறிவியல் நிறுவனத்தில் நடந்தது.
தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி பொதுமக்களிடம் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை பரப்புரை செய்து வருகிறது. இதுவரை 100 இடங்களில் நட்சத்திர திருவிழா, 200 இடங்களில் நிலா திருவிழா, 1000 இடங்களில் அஸ்டானாமி, 2024 இடங்களில் கோள்கள் திருவிழா, 200 இடங்களில் ஸ்கோப் பெஸ்டிவல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்தி முடித்துள்ளது.
2025ல் விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாடு மூலம் கல்லூரி மாணவர்களிடமும், 1000 இடங்களில் அஸ்ட்ரானமி லேப் மூலம் பள்ளி மாணவர்கள் மற்றும் பொது இடங்களிலும் , 5000 இடங்களில் அஸ்ட்ரானமி மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடமும் வானவியல் மற்றும் அறிவியல் கருத்துக்களை செயல் விளக்கத்துடன் பரப்புரை செய்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் தொடக்கமாக சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் மாநில அளவிலான 2 நாள் கருத்தரங்கு நடந்தது. கணித அறிவியல் நிறுவனத்தில் நடந்த முதல் நாள் நிகழ்ச்சிக்கு டாஸ் மாநில தலைவர் ரமேஷ் தலைமை வகித்தார்.டாஸ் மாநில பொதுச் செயலாளர் மனோகர் நோக்கவுரையாற்றினார். சென்னை அஸ்ட்ரோ கிளப் பொதுச் செயலாளர் உதயன் அனைவரையும் வரவேற்றார்.
சென்னை கணித அறிவியல் நிறுவன இயக்குனர் ரவிந்திரன் கலந்து கொண்டு 1000 இடங்களில் அஸ்ட்ரோ லேப்பிற்கான உபகரணங்கள், 5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்விற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கலந்து கொண்டு விண்வெளி அறிவியல் இளைஞர் மாநாட்டிற்கான இணைய தளத்தை துவக்கி வைத்து பேசினார். இதில் விஞ்ஞானிகள் கோவிந்தராஜன் இளங்கோ டாஸ் ஆலோசகர்கள் ஜோசப் பிரபாகர், ஜோஸ்பின் பிரபா உள்பட பலர் வானவியல் குறித்து பேசினர்.
2ம் நாள் நிகழ்வு சேலம் ஜெயமுருகனின் வானவியல் பாடலுடன் தொடங்கியது.இந்திய வான் இயற்பியல் நிறுவனத்தின் பொது மக்கள் தொடர்பு செயல்பாட்டு இயக்குநர் நிருஜி மோகன் ராமனுஜம் குறுகிய நீண்ட கால அறிவியல் செயல்திட்டங்கள் குறித்தும், முகிலன் மக்களும் விஞ்ஞானிகளாகலாம் எனும் தலைப்பிலும் பேசினர்கள்.
மோஹலி இந்திய அறிவியல் நிறுவன மூத்த விஞ்ஞானி த.வெங்கடேஸ்வரன், வானவியல் குறித்த செயல்விளக்க முறைகளை இணைய தள மூலமாக பேசினார். கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் விஞ்ஞான் பிராச்சாரின் முன்னாள் இயக்குனர் நகுல் பிரசார் சான்றிதழ்களை வழங்கி விழா நிறைவுரையாற்றினார். முடிவில் டாஸ் செயலாளர் செல்வக்குமார் நன்றி கூறினார். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து இயற்பியல் துறை பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், டாஸ் உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:49:31 PM (IST)
