» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் தீ விபத்து!

ஞாயிறு 16, பிப்ரவரி 2025 5:23:34 PM (IST)



தூத்துக்குடி டி மார்ட் வணிக வளாகத்தில் உள்ள  டீசல் பம்ப் அறையில்  ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள டி மார்ட் வணிக வளாகத்தில் டீசல் பம்ப் அறையில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து தூத்துக்குடி  மாவட்ட அலுவலர் ம.மனோ பிரசன்னா,  உதவி மாவட்ட அலுவலர் இ.இராஜு மற்றும் தூத்துக்குடி நிலைய உதவி மாவட்ட அலுவலர் ந.நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் பணியாளர்கள் விரைந்து சென்று, 2 இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 

உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்தால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



CSC Computer Education

Arputham Hospital






Thoothukudi Business Directory