» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவசாயம் வளம்பெற தூத்துக்குடி மேல்மருவத்தூர் சக்திபீடத்தில் பெண்கள் இளநீர் அபிஷேகம்
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 2:40:34 PM (IST)

தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
மேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அம்மா அருளாசியுடன் தூத்துக்குடி திருவிக நகர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்திபீடத்தில் விவசாயம் வளம்பெற ஆயிரக்கணக்கான பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து அன்னை ஆதிபராசக்தி அம்மனை வழிபட்டனர்.
விவசாயம் வளம்பெறவும், மக்கள் வளமுடன் வாழவும், தொழில்வளம் சிறக்கவும், தொற்று நோயிலிருந்து மக்களை காக்கவும் வேண்டி பெண்கள் இளநீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர். அபிஷேக நிகழ்ச்சியை கூட்டுறவு பண்டகசாலை பொதுமேலாளர் கந்தசாமி துவக்கி வைத்தார். தொடர்ந்து அன்னை ஆதிபராசக்திக்கு சக்திபீட பொருளாளர் அனிதா, மகளிர் அணி யசோதா ஆகியோர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து சிறப்பு தீபாராதனை செய்தனர். அருட்பிரசாதம், அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிபராசக்தி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார்.

விழாவில், இந்தியன் வங்கி மேலாளர் தியாகராஜன், யூகோ வங்கி மேலாளர் பரத்குமார், சக்திபீட துணைத் தலைவர் திருஞானம், தகவல் தொழில்நுட்ப பொறுப்பாளர் கோபிநாத், ஆத்தூர் சண்முகசுந்தரி, தளவாய்புரம் ராஜ், அண்ணாநகர் மன்றம் சிவஞானம், பேச்சியம்மாள், சக்திபீட பொறுப்பாளர்கள் வேல்ராஜ், மந்திரம், மகளிர் அணி பொறுப்பாளர்கள் பச்சியம்மாள், செல்வி, அகிலா, முத்துலெட்சுமி, சாந்தி, வீரலெட்சுமி உட்பட ஏராளமான செவ்வாடை பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:49:31 PM (IST)
