» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காவல்துறையினருக்கான முழு உடல் பரிசோதனை முகாம்: எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 12:30:25 PM (IST)
தூத்துக்குடியில் மாவட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் பரிசோதனை முகாமை எஸ்பி ஆல்பர்ட் ஜான் துவக்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் காவல் துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான முழு உடல் மருத்துவ பரிசோதனை முகாம் இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், மாநகர துணை கண்காணிப்பாளர் மதன் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் முகாமை துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில், "காவல்துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுவதாகவும், முதற்கட்டமாக தூத்துக்குடி மாநகர பகுதிகளில் உள்ள காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு நடத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 3000 காவல் துறையினருக்கும் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து காவல்துறையினர் உடல் தகுதியை திறமையை நிரூபிக்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தெரிவித்தார்.
இந்த மருத்துவ முகாமில் காவல்துறையினருக்கு மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இதய பரிசோதனை, கல்லீரல், புற்றுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதன் முடிவில் அவர்களுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு இருந்தால் அதற்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
புதன் 26, மார்ச் 2025 10:24:20 AM (IST)

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)
