» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயா்வு!
ஞாயிறு 16, பிப்ரவரி 2025 9:10:16 AM (IST)
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்களின் தொடா் வேலை நிறுத்தம் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்கள் விலை அதிகரித்து காணப்பட்டது.
தூத்துக்குடியில் விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால், நேற்று திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. ஆனால் ஆழ்கடலுக்குச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பாததாலும், நிலவு ஒளி காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது.
இதன் காரணமாக திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது. இதில், சீலா மீன் ஒரு கிலோ ரூ.1,100, ஊளி ரூ.700, விளை மீன் ரூ.650, பாறை மீன் ரூ.500, கட்டா ஒரு கூடை ரூ.700, நண்டு ரூ.600 என விற்பனையானது. மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
புதன் 26, மார்ச் 2025 10:24:20 AM (IST)

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் : விளாத்திகுளத்தில் பரபரப்பு
புதன் 26, மார்ச் 2025 10:15:39 AM (IST)

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

ஓFeb 16, 2025 - 09:12:23 AM | Posted IP 162.1*****