» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் ஒருவர் பலி : நண்பர் படுகாயம்!
சனி 15, பிப்ரவரி 2025 9:51:27 PM (IST)
ஸ்ரீவைகுண்டம் பைக் விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள கொங்கராயகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் சுப்பையா (65), இவர் மோட்டார் சைக்கிளில் தனது நண்பரான சாகுல் ஹமீது மகன் செய்யது இப்ராஹிம் (63), என்பவர் உடன் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து கொங்கராயகுறிச்சிருக்கு சென்று கொண்டிருந்தார். கருங்குளம் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறி பாலம் தடுப்புச் சுவரில் மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். இதில் தலையில் காயம் அடைந்த சுப்பையா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். செய்யது இப்ராஹிம் சிகிச்சைகாக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாரதியார் பிறந்த இல்லம் பழமை மாறாமல் மறு சீரமைக்கப்படும் : ஆட்சியர் க.இளம்பகவத்
புதன் 26, மார்ச் 2025 8:14:52 AM (IST)

பெரியதாழை, புத்தன்தருவை பகுதிகளில் எஸ்பி ஆய்வு
புதன் 26, மார்ச் 2025 8:10:28 AM (IST)

இளம்பெண்ணை கொலை செய்தவருக்கு ஆயுள் சிறை தண்டனை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 26, மார்ச் 2025 7:56:22 AM (IST)

ரோட்டரி கிளப் ஆப் பியர்ல் சிட்டி சார்பில் இப்தார் நிகழ்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:49:05 AM (IST)

பாரதியாா் இல்லத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்: பொதுமக்கள் அதிச்ச்சி
புதன் 26, மார்ச் 2025 7:40:06 AM (IST)

சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி!
செவ்வாய் 25, மார்ச் 2025 8:49:31 PM (IST)
