» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 4, பிப்ரவரி 2025 12:29:59 PM (IST)



பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

மத்திய அரசு சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற தமிழகம், கேரளா போன்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டது. இந்த இந்த பட்ஜெட்டில் ஏழை எளிய நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகையும் அளிக்காத மக்கள் விரோத பட்ஜெட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டை கண்டித்து தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

இதன்படி தூத்துக்குடியில் மாநகரச் செயலாளர் எம்.எஸ். முத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் சிறப்புரையாற்றினார், ஆர்ப்பாட்டத்தில் மாநகரக்குழு உறுப்பினர் ஆறுமுகம், ராமமூர்த்தி, கிஷோர்குமார், ஸ்ரீநாத்,  கமலம் மாமன்ற உறுப்பினர் முத்துமாரி மாவட்ட குழு உறுப்பினர்கள். சுரேஷ் மற்றும் புவிராஜ், கென்னடி, முன்னாள் மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, பென்சில், தாமோதரன், மாடசாமி, நந்தகுமார், ராம்குமார் உட்பட பலர் கலநது கொண்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory