» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியை தரம் உயர்த்த வேண்டும் : ஆட்சியரிடம் கோரிக்கை!

திங்கள் 3, பிப்ரவரி 2025 12:24:18 PM (IST)



தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இது தொடர்பாக பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில், "எங்களது குழந்தைகள் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவந்தாகுளம், தூத்துக்குடியில் படித்து வருகின்றனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், எங்களது குழந்தைகள் அரசு பள்ளிகளில் ஒரு சில காரணங்களால் தொடர முடியாதது மன வருத்தத்தை அளிக்கிறது. 

சிவந்தாகுளம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் LKG முதல் 8-ம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழியில் ஏறக்குறைய 1000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் சுற்று வட்டார பகுதியில் வசிக்கின்ற மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். ஆனால் 8- வகுப்பு முடித்தவுடன் மேற்படிப்பு தொடர சி.வ. மேல்நிலை பள்ளி, V.E.ரோடு, பள்ளி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த பள்ளியானது எங்களது பகுதியில் இருந்து வெகு தொலைவில் அமைந்து உள்ளது. 

போக்குவரத்து நெரிசல் அதிகமான Main Road ஆக இருப்பதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பொழுது சாலை விபத்து ஏற்படுகிறது. ஆதலால் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தொடங்க வேண்டும் என்று மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு குழந்தைகளும், நாங்களும் கடந்த வருடமே கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்துகிறது. 

கட்டிடங்கள் கட்டுவதற்கு அதிகப்படியான இடவசதியானது இந்த பள்ளியில் உள்ளது. மேலே குறிப்பிட்ட காரணங்களினால் எங்களது குழந்தைகளை தற்சமயம் தனியார் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த பள்ளியில் படித்தவர்கள் 8-ம் வகுப்பு முடித்தவுடன் சி.வ. உயர்நிலைப் பள்ளி செல்லாமல் அருகில் உள்ள தனியார் பள்ளிக்கு, மேற்படிப்புக்கு செல்வது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் தூத்துக்குடி முத்தையாபுரத்தை அடுத்து தென் பகுதியில் நகர்புறத்தில் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் எங்கள் பள்ளிதான் அரசு பள்ளியாக உள்ளது. 

அதனால் எங்கள் பள்ளியை உயர்நிலை பள்ளியாக மாற்றினால், தென் பகுதி மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். அரசு பள்ளிகளில் கல்வித்தரம் அருமையாக அளிக்கப்பட்டு வரும் பட்சத்தில, உயர்நிலை கல்வி இல்லாத காரணத்தால், மாணவ, மாணவிய செல்வங்களை தனியார் பள்ளிக்கு அனுப்பும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகவே தயவு கூர்ந்து வருகிற 2025-2026-ம் கல்வியாண்டிலேயே தூத்துக்குடி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, சிவந்தாகுளம் பள்ளியில் 9-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு தொடங்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory