» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிஎஸ்ஏ சிகால் நிறுவன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திங்கள் 3, பிப்ரவரி 2025 11:55:51 AM (IST)



தூத்துக்குடி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் டெர்மினலை மூட எதிர்ப்பு தெரிவித்து ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் பிஎஸ்ஏ சிகால் என்ற சிங்கப்பூர் நிறுவனம் சரக்கு கையாளும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கவில்லை என்றும், தற்போது டெர்மினலை மூடப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனைக் கண்டித்து பிஎஸ்ஏ சிகால் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதில், தொழிலாளர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உத்திரவாதம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

Panner SelvamFeb 3, 2025 - 03:20:48 PM | Posted IP 172.7*****

Am working more than 24years in PSA Sical ..They Just used our efficiency and wasted our life and no use at all ..we request kindly close this company before settling all our payment and final settlement and welfare for us.. Need Justice for 24 years service

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads

New Shape Tailors



Arputham Hospital






Thoothukudi Business Directory