» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கள் இறக்குவதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் : எர்ணாவூர் நாராயணன் பேட்டி
திங்கள் 20, ஜனவரி 2025 3:34:04 PM (IST)

கள் இறக்குவதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியம் தலைவரும், சமத்துவ மக்கள் கழகம் நிறுவனத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அழிந்து வரும் பனைமரங்களை காக்கவும், குறைந்து வரும் பனை தொழிலாளர்களின் நலன் காக்கவும் தமிழக அரசு பனைமரத் தொழிலாளர் நலவாரியம் அமைத்துள்ளது. நான் வாரிய தலைவரான பின்னர் 1 கோடி பனை மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒரே நாளில் 1 லட்சம் பனை மரங்கள் நடப்பட்டது.
நல வாரியம் மூலம் பல நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தற்போது காவல்துறை பனைத் தொழிலாளர்களை இறக்கும் பதநீரை கள் என்று கூறி பொய் வழக்கு பதிவு செய்து வருகிறார்கள். பதநீர் ஒரே நாளில் கள்ளாக மாறிவிடுகிறது. கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் சட்டத்தில் பனை மரத் தொழிலாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுகிறது. அதிக பட்சமாக அபராதமும் விதிக்கப்படுகிறது. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த பிரச்சனையில் தமிழக முதல்வர் தலையிட்டு தொழிலாளர்களின் நலன் காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கள் இறக்குவதற்கு தனிச்சட்டம் கொண்டு வரவேண்டும். மீனவர்களுக்கு வழங்குவது போல பனை தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் ஈரோடு இடைத் தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன் என்று தெரிவித்தார். பேட்டியின் போது, மாநில தொழிற்சங்க செயலளர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)
