» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கணவன், மனைவியிடம் செல்போன், பைக் பறிப்பு : இளம் சிறார் உட்பட 5 பேர் கைது
ஞாயிறு 19, ஜனவரி 2025 11:49:19 AM (IST)
தூத்துக்குடியில் குளத்தில் குளிக்கச்சென்ற கணவன், மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பைக்கை பறித்துச் சென்ற இளம் சிறார் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பிரைன்ட்நகர் 7வது தெருவில் வசிப்பவர் கல்யாண சுந்தரம். இவரது மனைவி முத்துமாரி (33). கணவன், மனைவி இருவரும் கோரம்பள்ளம் அருகே உள்ள காலங்கரை நீர்த்தேக்கத்தில் குளிப்பதற்காக சென்றனர். காலங்கரை கரை ஓரத்தில் இருவரும் நின்று கொண்டிருந்தபோது ஒரே மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் கணவன் மனைவி இருவரையும் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போன் மற்றும் அவரது மோட்டார் பைக்கையும் பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் முத்துமாரி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் தூத்துக்குடி கணேசன் காலனி சேர்ந்த ராஜ் மகன் சிவராம் (23) பிரைன்ட்நகரை சேர்ந்த மணிமகன் செல்வ பார்த்திபன் (23), 12வது தெருவைச்சேர்ந்த மாடசாமி மகன் சக்திபெருமாள் (19), முனியசாமி நகரைச் சேர்ந்த முருகன் மகன் இசக்கிராஜா (25) மற்றும் 17 வயது இளம் சிறார் ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 9:23:24 PM (IST)

மூத்த பெருமக்கள் நல்வாழ்விற்கு அதிக நிதி ஒதுக்கீடு : தமிழக முதல்வருக்கு கோரிக்கை!
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:31:01 PM (IST)

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி: அழகர் பப்ளிக் பள்ளி அணி வெற்றி
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 8:08:36 PM (IST)

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் பணியிடங்கள் : பிப்.28க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 4:29:10 PM (IST)

ரேஷன் கடைகளில் விரல் ரேகைகளை பதிவு செய்ய வேண்டும்: ஆட்சியர் அறிவிப்பு
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:59:30 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் பிப்.26ல் மகா சிவராத்திரி விழா
செவ்வாய் 18, பிப்ரவரி 2025 3:33:55 PM (IST)
