» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி சின்னத்துரை அன்கோவில் பொங்கல் சிறப்பு விற்பனை

திங்கள் 13, ஜனவரி 2025 12:36:10 PM (IST)



தூத்துக்குடி கே.சின்னத்துரை அன் கோ ஜவுளிக் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜவுளி மற்றும் தங்க நகை வாங்க மக்கள் அலைமோதி வருகின்றனர்.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை (14ம் தேதி) கொண்டாடப்படுகிறது. மேலும் 15 மற்றும் 16ம் தேதிகளில் மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் ஜவுளிகள் எடுக்க ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால் தூத்துக்குடியில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனங்களிலும் கூட்டம் காணப்படுகிறது. 

தூத்துக்குடி, திருச்செந்தூர், ஏரல்  மற்றும் சென்னையில் மக்களின் பேராதரவை பெற்ற பிரபல ஜவுளி நிறுவனமான கே.சின்னத்துரை அன்கோ, தூத்துக்குடி தமிழ் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு பெண்களுக்கான சேலைகள், சுடிதார் உட்பட புதிய மாடல்கள், ஆடவர்களுக்கு பிரபல நிறுவனங்களின் ஷூட்டிங், சர்டிங், வேஷ்டி மற்றும் துனி வகைகள், குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் ஏராளமாக விற்பனைக்கு குவிந்துள்ளது. இளைஞர்களை கவரும் வகையில் புதுப்புது டிசைன்களில் ரெடிமேட், பேண்ட் சர்ட் வகைகள் விற்பனைக்கு வந்துள்ளது.

அனைத்து விதமான ஜவுளி வகைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் ஜவுளிகளை வாங்கிச் செல்கின்றனர். மேலும், வாடிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு இலவசமாக மெஹந்தி, பலூன், மேஜிக், முகம் பார்த்து ஓவியம் வரைதல் மற்றும் குட்டீஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.



இதனால் சின்னத்துரை அன்கோ.வில் பொங்கல் பண்டிகை விற்பனை களை கட்டியுள்ளது. ஏற்பாடுகளை நிறுவன பங்குதாரர்கள் கே.திருநாவுக்கரசு, எஸ்.அரிராமகிருஷ்ணன், டி.நமசிவாயம் உள்ளிட்டோர் சிறப்பாக செய்து வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads




New Shape Tailors

Arputham Hospital





Thoothukudi Business Directory