» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மதுரா கோட்ஸ் ஆலை தொழிலாளர்களுக்கு உரிய பலன்களை வழங்க கோரிக்கை!
திங்கள் 13, ஜனவரி 2025 12:28:56 PM (IST)

தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள மதுரா கோட்ஸ் ஆலை தொழிலாளர்களுக்கு நியாயமான பண பலன்களை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "தூத்துக்குடியில் சுமார் 144 வருடங்களுக்கு மேலாக மிக சிறப்பாக இயங்கி இலட்ச கணக்கான குடும்பங்களை வாழ வைத்த மதுரா கோட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆலையை கடந்த மாதம் 07.12.2024 முதல் ஆலையை மூடி விட்டார்கள்.
ஒவ்வொரு தொழிலாளர்களையும் அச்சுறுத்தியும், மனதை குழப்பியும். இந்த ஆலை ஓடாது. ஆலையை மூடி விடுவோம் என்று பயமுறுத்தியும் 07.12.2024 அன்று இரவு வரை தொழிலாளர்களிடம் கட்டாயபடுத்தி விருப்ப ஓய்வு என்ற பெயரில் அனுப்பி சட்டத்திற்கு புறம்பாக ஆலையை மூடி விட்டார்கள். தொழிற்சங்கங்களும் இதற்கு உடந்தையாக செயல்பட்டு உள்ளன.
கிராஜுவிட்டி பணம் வருடத்திற்கு 30 நாட்கள் தருவதாக வாக்குறுதி அளித்தார்கள். அதை நம்பி அனைத்து தொழிலாளர்களும் விருப்ப ஓய்வு என்ற பெயரில் கட்டாய ஓய்வில் சென்று விட்டோம். எங்களிடம் எந்தவித சம்மமும் இல்லாமல் கையெழுத்தும் வாங்காமல் 03.01.2025 அன்று மிக குறைந்த கிராஜுவிட்டி பணத்தை எங்கள் வங்கி கணக்கில் நிர்வாகம் செலுத்தி உள்ளது.
மதுரா கோட்ஸ் நிறுவனம் ஒரு பன்னாட்டு நிறுவனம். சுமார் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் தொழிற்சாலை வைத்து மிக சிறப்பாக செயல்பட்டு மிக அதிகம் லாபம் ஈட்டும் நிறுவனம் மதுரா கோட்ஸ் ஆலை. தமிழ்நாட்டில் மூன்று இடத்தில் அதாவது அம்பாசமுத்திரம், மதுரை. தூத்துக்குடி ஆகிய இடங்களில் மிக சிறப்பாக செயல்பட்டு நடைபெற்று வந்ததில் தூத்துக்குடி ஆலையை மட்டும் சட்டத்திற்கு புறம்பாக மூடி விட்டார்கள்.
ஆகவே இந்த விஷயத்தில் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வர வேண்டிய நியாயமான பண பலன் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை ஆலையில் எக்காரணங்கள் கொண்டும் இயந்திரங்களை கழற்றக் கூடாது. ஆலையை விட்டு வெளியில் எடுத்து செல்ல கூடாது என்று ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை : போலீசார் விசாரணை!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:34:19 PM (IST)

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:03:25 PM (IST)
_1739287857.jpg)
காவல்துறை சார்பாக மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் : எஸ்பி ஆல்பர்ட் ஜான் தகவல்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:59:57 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் தெப்பத்திருவிழா : திரளான பக்தர்கள் தரிசனம்
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 8:40:46 PM (IST)

புளியம்பட்டி அந்தோணியார் ஆலயத் திருவிழா: திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
செவ்வாய் 11, பிப்ரவரி 2025 4:40:44 PM (IST)

பாஸ்கர்Jan 13, 2025 - 08:26:59 PM | Posted IP 172.7*****