» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

நாசரேத்தில் சிலம்ப பள்ளி சார்பாக பொங்கல் விழா!

திங்கள் 13, ஜனவரி 2025 12:14:44 PM (IST)



தமிழர் திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் ஆலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி சார்பாக பாரம்பரிய முறைப்படி சிலம்ப பொங்கல் கொண்டாடப்பட்டது.

தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தையும், பாரம்பரிய பண்டிகையான பொங்கலை உலகளவில் கொண்டு செல்வதற்காகதேரி காட்டில் பொங்கலிட்டு சிலம்பம் சுற்றி கொண்டானர். இதில் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பொங்கல் பானை முன் தனியாகவும், குழுவாகவும் சிலம்பம் சுற்றி தங்கள் திறமையை வெளிப்படுத்தி பொங்கலிட்டு கொண்டாடினர். 

தொடர்ந்து சிலம்ப கம்புகள், சுருள்வால், உள்ளிட்ட தற்காப்புக் கலை ஆயுதங்களை வைத்து சிலம்பம் சுற்றி பாரம்பரியத்தை வெளிப்படுத்தினார். இதில் அப்பகுதியை சேர்ந்த ஊர்மக்கள் கலந்துகொண்டு சிலம்ப பொங்கலை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடு அலன் திலக் கராத்தே மற்றும் சிலம்ப பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசன் ஏற்பாடு செய்திருந்தார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads

New Shape Tailors






Arputham Hospital



Thoothukudi Business Directory