» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

விவசாய நிலம் அருகே கல்குவாரிக்கு அனுமதி அளிக்க கூடாது : கிராம மக்கள் கோரிக்கை!

திங்கள் 13, ஜனவரி 2025 11:25:10 AM (IST)



சேரகுளம் பகுதியில் விவசாய நிலங்களுக்கு அருகே கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் செய்ய அனுமதி அளிக்க கூடாது என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக கிராம மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், "சேரகுளம் பகுதியில் தென்னை, நெல் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து வருகின்றோம். அதில் ஊடுபயிராக கடலை, உளுந்து விவசாயம்செய்து வருகின்றோம். எங்களது வாழ்வாதாதரம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி உள்ளது.

இந்நிலையில் சேரகுளம் பகுதியில் கல்குவாரி மற்றும் கிரஷர் தொழில் செய்ய சிலர் விண்ணப்பித்துள்ளார்கள். மேலும் சர்வே நம்பரின் மிக அருகாமையில் மகிழ்ச்சிபுரம் என்னும் கிராமத்தில் 200 வீடுகள் உள்ளன. இதேப்போல் பருத்திப்பாடு என்ற கிராமத்தில் 300 குடும்பங்கள் உள்ளது. இந்த 2 கிராமத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் போன்றவை இங்குள்ள நிலத்தடி நீரை நம்பியே உள்ளது. 

இவ்வாறு கிரஷ்ஷர். கல் குவாரி ஆகியவை அருகில் வரும் பட்சத்தில் இந்த பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் குறைவதுடன், காற்றில் தூசி மாசு ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதே போன்ற நிகழ்வுகள் நமது மாவட்டத்தில் பல பகுதியில் ஏற்பட்ட உதாரணங்கள் உள்ளது. எனவே சேரகுளம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கல்குவாரி, கிரஷ்ஷர் தொழில் அனுமதிக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads

Arputham Hospital






New Shape Tailors



Thoothukudi Business Directory