» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி சிவன் கோவிலில் ஆருத்ரா தரிசனம்!
திங்கள் 13, ஜனவரி 2025 10:18:02 AM (IST)

தூத்துக்குடி சிவன் கோவிலில் திருவாதிரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனந்த ஆருத்ரா தரிசனம் இன்று காலை நடைபெற்றது.
தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு சிவனுக்கு திருவெம்பாவை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை திருவிழா ஜன.4ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிகிறது.
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று (13ஆம் தேதி) ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. இதையொட்டி அன்று அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 2.30 மணிக்கு திருவனந்தல், 3 மணிக்கு அபிஷேகம், 4 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, 5 மணிக்கு காலசந்திபூஜைகள் நடைபெற்றது. பின்னர் காலை 6 மணிக்கு ஸ்ரீஆடவல்லான் ஆனந்த ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூண்டில் வளைவு அமைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம்: தமிழக வெற்றிக் கழகம் ஆதரவு
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:54:04 PM (IST)

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)

வனங்களை உருவாக்க கல்லூரி மாணவர்கள் உறுதியேற்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 5:12:35 PM (IST)

தூத்துக்குடியில் ஜன.21ல் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:56:45 PM (IST)

சகிப்பின்மைக்கு இடமில்லை: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கனிமொழி எம்.பி. ஆதரவு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 4:11:07 PM (IST)

ஷஃபான் பிறை: பிப்.3ல் பராஅத் இரவு அனுசரிப்பு!
செவ்வாய் 20, ஜனவரி 2026 3:13:07 PM (IST)








