» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு!

திங்கள் 13, ஜனவரி 2025 8:14:04 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜன.14) முதல் 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி 14.01.2025 மற்றும் 15.01.2025 ஆகிய தினங்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் (Heavy Rain Warning) கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூடைகள், மரம் அறுக்கும் கருவிகள் மற்றும் மோட்டார் பம்புகள் முதலிய பொருள்களை தயார் நிலையில் வைத்திடவும் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது மிகவும் அவசரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து

இதுJan 17, 2025 - 10:38:58 AM | Posted IP 162.1*****

ஒரு உருட்டு செய்தி

KingJan 13, 2025 - 10:39:40 PM | Posted IP 172.7*****

ஏற்கனவே பேஞ்ச மழைக்கு தூத்துக்குடி தாங்கல இதுக்கப்புறம் பெஞ்சா தூத்துக்குடி அவ்வளவுதான்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

பெண்ணிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது!

செவ்வாய் 11, பிப்ரவரி 2025 9:39:17 PM (IST)

Sponsored Ads


New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory