» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாத்தான்குளம் நூலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா

வெள்ளி 10, ஜனவரி 2025 8:53:08 PM (IST)



சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது

சாத்தான்குளம் இராம கோபால கிருஷ்ணர் அரசு கிளை நூலகத்தில் நூலகர்கள் பணியாளர்கள் மற்றும் வாசகர்கள் சார்பில் சமத்துவ பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் நடராசன் தலைமை தாங்கினார். வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் மகா பால்துரை முன்னிலை வகித்தார்.சாத்தான்குளம் நூலகர்  இசக்கியம்மாள் வரவேற்றார்.

இவ்விழாவில் பண்டாரபுரம் கிளை நூலகர் சிவரஞ்சனா முதலூர் கிளை நூலகர் எமரன்ஸியா பொத்தக் காலன்விளை கிளை நூலகர் நல் நூலகர் விருது பெற்ற சுப்பிரமணியன் பூச்சிக்காடு கிளை நூலகர் நமச்சிவாயம் சுப்பிரமணியபுரம் கிளை நூலகர் உமா மகேஸ்வரி சங்கரன்குடியிருப்பு கிளை நூலகர் இராஜ பிரபா பழனியப்பபுரம் கிளை நூலகர் கிருபை நூலக பணியாளர்கள் மைக்கேல் ராஜ் கனக முத்து மணிகண்டன் கலந்து கொண்டனர்

மேலும் நூலக வாசகர்கள், போட்டித் தேர்வில் பங்குபெற பயிற்சி பெறும் இளைஞர்கள் இளம்பெண்கள் வாசகர் வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. முடிவில் சாத்தான்குளம் கிளை நூலகர்  அன்னாள் ஜெயந்தி நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads






CSC Computer Education

Arputham Hospital



Thoothukudi Business Directory