» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக வெற்றி கழகம் மாவட்ட செயலாளர் பதவி யாருக்கு? தூத்துக்குடி அஜிதா ஆக்னல் அதிருப்தி!!

வெள்ளி 10, ஜனவரி 2025 4:06:01 PM (IST)

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி அஜிதா ஆக்னலுக்கு வழங்காததால் அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழக வெற்றி கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், உள்கட்டமைப்பு சார்பு அணிகள் பலவற்றுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் பணிகள் கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக அக்கட்சியின் தலைவர் விஜய் மேற்பார்வையில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இந்த வாரத்திற்குள் இறுதி செய்யப்பட வேண்டும் என கட்சியின் தலைவர் விஜய் உத்தரவிட்டதன் பெயரில் இன்று சென்னை பனையூர் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் உயர்மட்ட பொறுப்பாளர்கள் உடன் ஆலோசனை நடத்தப்பட்டது..

ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து மாவட்டத் தலைவர்கள் அணி பொறுப்பாளர்கள் என ஐந்து நபர்கள் வீதம் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரவைக்கப்பட்டு, ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், மாவட்டத்திற்கு இரண்டு மாவட்டச் செயலாளர் அல்லது இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற விதத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு இறுதி பட்டியலை தலைமைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாவட்ட செயலாளராக நியமிக்கப்படும் பொறுப்பாளர்கள் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக கட்சி தலைவர் விஜயை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை பெற உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் வழக்கறிஞர் அணி, மகளிர், இளைஞர் அணி, உள்ளிட்ட உள்கட்டமைப்பு சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்க ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. இவர்களது இறுதி பட்டியலும் அக்கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் இரு அணிகளாக பிரிந்து கட்சிக்கு வேலை செய்து வருவதால் மாவட்ட செயலாளர்களை இறுதி செய்வதில் சிக்கல் நீடித்து வருவதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளரான அஜிதா ஆக்னல் என்பவருக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்படாமல் பாலன் என்பவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அஜிதா தனது அதிருப்பதியை தெரிவித்துள்ளார். அவர்களிடம் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory