» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் வைகுண்ட ஏகாதசி விழா: சயன கோலத்தில் பெருாள் பக்தர்களுக்கு காட்சி

வெள்ளி 10, ஜனவரி 2025 12:30:39 PM (IST)



தூத்துக்குடியில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு சயன கோலத்தில் வைகுண்டபதி பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகுண்ட ஏகாதசி விழாவும் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆண்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருவதால் வைகுண்ட ஏகாதசி விழா எஸ்.வி.எஸ்.கே பஜனை மடத்தில் நடைபெற்றது. இதையொட்டி இன்று காலையில் கோபூைஜை, விசுவரூப தரிசனம் நடந்தது. 

காலை 4 மணிக்கு சுவாமி சயன கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை பரம பத நாதன் ஸ்ரீ வைகுண்ட நாதர் அலங்காரம் திருக்காட்சி நடைபெறுகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Arputham Hospital








Thoothukudi Business Directory