» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது!
வெள்ளி 10, ஜனவரி 2025 8:25:58 AM (IST)
தூத்துக்குடியில் போலீசாரை கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி சுனாமி காலனி பகுதியில் தாளமுத்துநகர் போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் அய்யம் பிள்ளை தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது, கத்தியுடன் நடமாடிய ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்த முயன்றனர். உடனடியாக அந்த வாலிபர் கத்தியை காட்டி போலீசாரை மிரட்டி உள்ளார். சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நேருகாலனி சுனாமி காலனியை சேர்ந்த மீனவர் முத்ரா என்ற விக்னேஷ் (24) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேசை கைது செய்தனர். மேலும், அவரது பின்னணி குறித்தும், அவர் மீது வேறு வழக்குகள் ஏதும் உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.