» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழ்நாட்டை அவமதிக்கும் ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

செவ்வாய் 7, ஜனவரி 2025 10:49:59 AM (IST)



தமிழ்நாட்டை அவமானபடுத்தியதாக தமிழக ஆளுநரைக் கண்டித்து தூத்துக்குடியில் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழக ஆளுநர் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் தொடர்ந்து வஞ்சித்து வருவதாகவும், சட்டப்பேரவையில் காலகாலமாக கடைபிடித்து வரும் மாண்பை மீறும் வகையில் நடந்து கொள்வதாகவும், திமுக தலைமைக் கழகத்தின் அறிவிப்பின் பேரில் தூத்துக்குடியில் வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இன்று பாளைரோடு சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் எதிரில் தூத்துக்குடி மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ஆனந்தசேகரன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின். ஆறுமுகம் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், திமுக நிர்வாகிகள் பிரம்மசக்தி, கஸ்தூரி தங்கம், மீனவர் அணி அந்தோணி ஸ்டாலின், வழக்கறிஞர் அணி குபேர் இளம்வழுதி, ஜேஎஸ் ரூபஸ், அமிர்தராஜ், மருத்துவ அணி அருண்குமார், அயலக அணி எஸ்எஸ்பி அசோக், வழக்கறிஞர் கிறிஸ்டோபர் விஜயராஜ், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், சுரேஷ்குமார், பிரபாகரன், நிர்மல் ராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் அன்னலட்சுமி, கோட்டு ராஜா, கலைச்செல்வி, திலகராஜ், பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டூராஜா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா முருகேசன், கனகராஜ், முத்துவேல், பொன்னப்பன், வட்டச் செயலாளர்கள் சுரேஷ், கதிரேசன், செல்வராஜ் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து

AnumathiJan 7, 2025 - 02:01:03 PM | Posted IP 162.1*****

Anna palgalaikalaga maanavi thunpuruthalai kandithu arppatam seyya anumathillai....? intha aarpatathirku mattum anumathiya??

IndianJan 7, 2025 - 01:15:55 PM | Posted IP 162.1*****

Ask to sing national anthem is insult to Tamilnadu?

தெரியாமல் ஓட்டு போட்ட முட்டாள்Jan 7, 2025 - 11:14:59 AM | Posted IP 172.7*****

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவிகளை பாலியல் துன்புறுத்தியபோது போராட்டம் கிடையாதா? வேடிக்கையா ?? கடவுளே

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory