» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் : சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்!

சனி 30, நவம்பர் 2024 5:47:12 PM (IST)



ஓட்டப்பிடராம் அருகே தருவைகுளத்தில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை சண்முகையா எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா தருவைகுளம் கிராமத்தில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கலைஞரின் வரும்முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் தூய மிக்கேல் தொடக்கப்பள்ளியில் நடந்தது. ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். 

சிறப்பு அழைப்பாளராக சண்முகையா எம்.எல்.ஏ கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். மேலும், அவர் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கினார். பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வழிமுறைகளை பார்வையிட்டார். மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் எம்.எல்.ஏ வழங்கினார். 

சிறப்பு மருத்துவர்கள் ஐஸ்வர்யா, ரேவதி, சரிதா, நிவேதா, நாகராஜன் ஆகியோர் பொது மக்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் தருவைக்குளம் சுற்றி உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் ஆனந்த, மாவட்ட மருத்துவ அலுவலரின் நேர்முக உதவியாளர் மதுரம்பிரைட்டன், ஓட்டப்பிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அன்புமாலதி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் பெரியசாமி, ஆழ்வார், பாபு, பங்குத்தந்தை வின்சென்ட், பஞ்சாயத்து தலைவர்கள் அருண்குமார், காடோடி உட்பட சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors




CSC Computer Education

Arputham Hospital





Thoothukudi Business Directory