» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
சனி 30, நவம்பர் 2024 5:33:04 PM (IST)
தூத்துக்குடி டூவிபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட டூவிபுரம் 30-வது வார்டில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் காசிலிங்கம் ஏற்பாட்டின் பேரில் கட்சி உறுப்பினர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர் சுவேந்தர் கலந்துகொண்டு புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல் தலைவர் சிவ கணேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.