» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
சனி 30, நவம்பர் 2024 3:30:20 PM (IST)

"திமுக வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது. நேற்று முளைத்த கட்சிகள் எல்லாம் இன்று நாங்கள் எல்லாம் என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது" என அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடியில், துணை முதலமைச்சர், திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர் அரங்கில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் இன்பா ஏ.என் ரகு மாவட்ட துணை அமைப்பாளர்கள் பிரதீப், மகேந்திரன், ராதா கிருஷ்ணன், பாரதி, ஜோசப் அமல்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலதிட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது "பெரியார் வழியில் வந்த திராவிட மாடல் அரசு தமிழகத்தில் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கி தமிழகத்தில் முதன்மை கட்சியாக விளங்கி வருகிறது. திமுக வரலாற்றை யாராலும் அழிக்க முடியாது. நேற்று முளைத்த கட்சிகள் எல்லாம் இன்று நாங்கள் எல்லாம் என்று கூறுவது நகைச்சுவையாக உள்ளது. ஹிந்தி படிக்க வேண்டும், ஆனால் அதை கட்டாயம் ஆக்க கூடாது.
தமிழை வளர்க்க வேண்டும் என்று கலைஞர் அன்றும் பாடுபட்டார். இன்று தளபதியும் பாடுபட்டு வருகிறார். இளைஞர்கள் அதிக புத்தகங்களை வாசிக்க வேண்டும். விளையாட்டு துறையில் தமிழகம் முதன்மை பெற வேண்டும் என்பதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார். தமிழக முழுவதும் 234 தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுகிறது. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இதை இளைஞர்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் ஆக்கபூர்வமான முடிவுகள் எடுக்க வேண்டும். நீங்கள் உங்களது எதிர்கால வாழ்க்கையை நீங்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் தீய பழக்கங்களில் இருந்து விலகி விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார். இந்நிகழ்ச்சியில் இலவச தையல் மிஷின், கிரைண்டர், ஃபிரிட்ஜ் மற்றும் 100க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகளுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
விழாவில், மாநகர செயலாளர் எஸ்ஆர் ஆனந்த சேகரன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கவிதா, முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சங்கர நாராயணன், சிவக்குமார், ரவி, முகமது, ஜெயலாபுதீன், பிரவீன் குமார், விளாத்திகுளம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா நிறைவில் பகுதி இளைஞரணி அமைப்பாளர் எம்.ராஜா பெரியசாமி நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:23:07 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)

ஆற்றுப்பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு ரூ.30 இலட்சம் நிதியுதவி!
வியாழன் 19, ஜூன் 2025 12:34:23 PM (IST)

தூத்துக்குடியில் ஐடி கம்பெனி அதிபரிடம் ரூ.1½ கோடி நிலம் மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
வியாழன் 19, ஜூன் 2025 12:09:56 PM (IST)
