» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அடைக்கலாபுரத்தில் தொட்டில் குழந்தை அறை திறப்பு விழா: குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ச்சி
சனி 30, நவம்பர் 2024 3:12:56 PM (IST)

அடைக்கலாபுரத்தில் புனித சூசை அறநிலையும் சிறப்பு தத்துவ மையம் சார்பில் தொட்டில் குழந்தை அறை திறப்பு மற்றும் குழந்தைகள் தத்தெடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள அடைக்கலாபுரத்தில் தேசிய தத்தெடுப்பு மாதம் நவம்பர் மாதத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் அலெக்ஸ் தொட்டில் குழந்தை அறை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் அதனைத் தொடர்ந்து குழந்தை தத்தெடுப்பு நிகழ்ச்சிக்கு அருட்தந்தை பிரெமில்டன் லோபா தலைமை தாங்கினார்
பின்பு தூய சூசை அறநிலை குழந்தைகள் மற்றும் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியின் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் குழந்தைகளை தத்தெடுக்கும் முறைகளை குறித்து விழிப்புணர்வு நாடகத்தை தத்துரூபமாக நடத்திக் காட்டினர். இந்நிகழ்ச்சியில் அருள்பணி மேரியா,செட்ரிக் பீரிஸ்,அந்தோணி பிரஜித்,ஜேமஸ், திரு இருதய சபை, மற்றும் புனித அன்னாள் சபை அருட் சகோதரிகள், குடும்பததார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சமூகப் பணியாளர் வில்சன் பிச்சை சிறப்பாக செய்திருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கரூர் வைஸ்யா வங்கியின் 3-ம் ஆண்டு துவக்க விழா: இலவச மருத்துவ முகாம்
வியாழன் 19, ஜூன் 2025 5:52:26 PM (IST)

நன்னீர் மீன்வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் : மீன்வளக்கல்லூரி சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 5:36:34 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் வெள்ளநீர் தடுப்புப் பணிகள் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆய்வு
வியாழன் 19, ஜூன் 2025 4:23:07 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் குடமுழுக்கு என்பது ஏமாற்று வேலை : சீமான் அறிக்கை
வியாழன் 19, ஜூன் 2025 3:53:59 PM (IST)

பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
வியாழன் 19, ஜூன் 2025 3:15:58 PM (IST)

கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரும் தொடர் போராட்டத்தின் 400ஆவது நாள் நிகழ்ச்சி!
வியாழன் 19, ஜூன் 2025 12:47:28 PM (IST)
