» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் இரத்ததான முகாம்: அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
சனி 30, நவம்பர் 2024 12:50:33 PM (IST)
தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் நடைபெற்ற இரத்ததான முகாமை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய இரத்ததான முகாம் தூத்துக்குடி கலைஞர் அரங்கில் தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் எஸ். அபிராமிநாதன் தலைமையில் நடந்தது. திமுக வடக்கு மாவட்ட செயலாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் எம்.பிரபு. அந்தோணி கண்ணன், பழனி குமார், நாகராஜன், அருணா தேவி, தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சி.என். அண்ணாதுரை, அஸ்வின் துரை, வைதேகி, ஸ்ரீதர், கரன் குமார், அருணா, ஹரிகரன், கற்பகம், பகுதி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், ஜோயல், சஞ்சய், மார்கின் ராபர்ட், சந்தான முனீஸ்வரன், சம்சு கனி, ஆனந்த், ஹரிபாலா மற்றும் வார்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இரத்ததான முகாம் ஏற்பாடுகளை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டாக்டர் சாந்தி மற்றும் செவிலியர்கள் செய்திருந்தனர்.