» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை: மேயருக்கு பொதுமக்கள் நன்றி!
சனி 30, நவம்பர் 2024 11:59:57 AM (IST)
தூத்துக்குடி எஸ்ஆர் நகர் பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுத்த மேயருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எஸ்ஆர் நகர் பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் குடிநீர் இணைப்பு இல்லாதால் அப்பகுதி மக்கள் மேயரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் புதிய குடிநீர் இணைப்பு வழங்க மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து அந்தப் பகுதியினை சேர்ந்த பொதுமக்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.