» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த சக மாணவன் மீது வழக்கு!
வெள்ளி 29, நவம்பர் 2024 8:20:25 PM (IST)
சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த அதே வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் பிளஸ் 1 படித்து வந்துள்ளனர். வலைதள மோகத்தில் தனியார் பள்ளியில் மாணவனும், மாணவியும் வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலித்து வந்துள்ளனர்.
இதற்கிடையே கடந்த மே மாதம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு தெரியாமல் ரகசியமாக நண்பர்கள் உதவியுடன் திருமணம் முடித்துள்ளனர். பின்னர் வழக்கம் போல் பள்ளிக்கும் வந்துள்ளனர். நேற்று மாணவர்கள் இருவர் மீதும் அவர்களது பெற்றோருக்கு சந்தேகம் வந்து விசாரித்துள்ளனர். அதில் பிளஸ் 1 மாணவன், மாணவியை காதல் திருமணம் செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
உடன் மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நாககுமாரி விசாரணை நடத்தி மாணவன் மீது வழக்கு பதிந்து மாணவியை தூத்துக்குடியில் உள்ள காப்பகத்தில் ஓப்படைத்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டது தெரியவந்ததும் மாணவன் தலைமறைவாகி விட்டார்.
இச்சம்பவம் சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதையடுத்து பரபரப்பாக பேசப்படுகிறது. இதுதொடர்பான அரசுத்துறை அதிகாரிகள் பள்ளி பருத்துவத்தில் அறியாமையாக காதலித்து திருமணம் செய்து கொள்ளும் நிலையை மாற்றிட அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் இதுதொடர்பாக மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு கவுன்சிலிங் நடத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றிவந்த லாரி மீது வேன் மோதல்: 12 பெண்கள் உட்பட 15பேர் காயம்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:27:22 PM (IST)

பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது : கனிமொழி எம்பி பேட்டி
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:31:50 AM (IST)

தூத்துக்குடியில் சைக்கிள் வழித்தடம்: கனிமொழி எம்பி ஆய்வு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:39:41 AM (IST)

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:26:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:17:58 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: மேலும் 2பேர் கைது!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:58:39 AM (IST)
