» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 4-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!
வெள்ளி 29, நவம்பர் 2024 5:41:18 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் புயல் எச்சரிக்கை காரணமாக இன்று 4வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
கனமழை, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் இன்று 4வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
மேலும் பெரும்பாலான நாட்டு படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதுபோல் நெல்லை, குமரி மாவட்டங்களிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. கடலுக்கு செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலை நம்பி இருக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் சுமார் 4 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.