» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம்: 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்
வெள்ளி 29, நவம்பர் 2024 4:26:19 PM (IST)

ஆரைக்குளம் கிராம ஊராட்சியில் நடந்த சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஆரைக்குளம் கிராம ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் தொடர்பான சமூகத்தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு சமூக தணிக்கை சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் 23 கட்டங்களாக சமூக தணிக்கை நடைபெற்று வருகிறது.
இதில் 11-வது கட்டமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியத்தில் 20 கிராம ஊராட்சிகளில் நவ-25ம் தேதி முதல் நவ - 29ம் தேதி வரை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் கிராம வள பயிற்றுநர்களால் சமூகத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான சமூகத் தணிக்கை அறிக்கை சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆரைக்குளம் கிராம ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திற்கு கூட்டத் தலைவர் காளியம்மாள் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் சங்கரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இமாம் அசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலர் மாலதி அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தினை ஓட்டப்பிடாரம் சமூகத் தணிக்கை வட்டார வள பயிற்றுனர் முத்துமுருகன் வழிநடத்தி சமூக தணிக்கை அறிக்கை தொடர்பாக மக்களுடன் கலந்துரையாடல் செய்தார். கூட்டத்தில் வேலை அட்டை வேண்டி விண்ணப்பித்த பயனாளிக்கு வேலை அட்டை வழங்கப்பட்டது.
சமூகத் தணிக்கை அறிக்கை குறித்த 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் கிராம வள பயிற்றுநர்கள் ராஜகுமாரி, மாரியம்மாள், கலைமணி, முத்துசெல்வி, வார்டு உறுப்பினர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணித்தள பொருப்பாளர் ராமலட்சுமி நன்றி கூறினார். இதேபோல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் மீனாட்சிபுரம், தென்னம்பட்டி உள்பட தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஊராட்சிகளில் சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

காற்றாலை இறக்கை ஏற்றிவந்த லாரி மீது வேன் மோதல்: 12 பெண்கள் உட்பட 15பேர் காயம்!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 12:27:22 PM (IST)

பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்த கூடாது : கனிமொழி எம்பி பேட்டி
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 11:31:50 AM (IST)

தூத்துக்குடியில் சைக்கிள் வழித்தடம்: கனிமொழி எம்பி ஆய்வு
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:39:41 AM (IST)

மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட்டு: தூத்துக்குடியில் மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:26:43 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.47.94 கோடி மதிப்பிலான இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்: ஆட்சியர் தகவல்
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 10:17:58 AM (IST)

தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை: மேலும் 2பேர் கைது!
செவ்வாய் 29, ஏப்ரல் 2025 8:58:39 AM (IST)
