» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாநகராட்சியில் போதை மறுவாழ்வு மையம்: மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

வெள்ளி 29, நவம்பர் 2024 12:29:40 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் தனியார் பங்களிப்புடன் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார். 

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மேயர் "தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இதுவரை 19 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். பூங்கா இல்லாத பகுதியான முத்தையாபுரம் பகுதியில் விரைவில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

மேலும் முத்துநகர் பூங்கா உள்ளிட்ட கடற்கரை பூங்காக்கள் மேம்படுத்தப்பட உள்ளது. தனியார் பங்களிப்புடன் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் போதை மறுவாழ்வு மையம் அமைக்கப்பட உள்ளது. இதுவரை குடிநீர் இணைப்பு இல்லாத பகுதி மக்களுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். காங்கிரஸ் மற்றும் திமுக கவுன்சிலர்கள் தூத்துக்குடி மாநகராட்சி தீர்வை கட்டணம் அதிகமாக உள்ளது. அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

திமுக உறுப்பினர் கனகராஜ் பேசும்போது, "பழமை வாய்ந்த சங்க நாராயணன் பிள்ளை பூங்காவை சீரமைக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.  மேலும் பல்வேறு பகுதிகளில் குடிநீர் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். முன்னதாக மாநகராட்சி வழக்கறிஞர் சாமுவேல் ராஜேந்திரன் மறைவுக்கு 2 நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


மக்கள் கருத்து

A. VijaikumarNov 29, 2024 - 09:55:32 PM | Posted IP 162.1*****

We appreciate your initiative for opening rehabilitation center. Please open it outside residential area.

K MEENAKSHINov 29, 2024 - 09:52:09 PM | Posted IP 172.7*****

Please try to start the rehabilitation centre outside residential area.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital





New Shape Tailors



Thoothukudi Business Directory