» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுனருக்கு எடப்பாடியார் ரூ.1லட்சம் நிதி உதவி!
வெள்ளி 29, நவம்பர் 2024 8:04:10 AM (IST)
தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ரூ.1லட்சம் நிதி உதவியை வழங்கினார்.
தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பன் வாடகைக்கு ஆட்டோ எடுத்து தொழில் செய்து வந்துள்ளார். தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கத்திலும் பொறுப்பாளராக செயல்பட்டும் வந்துள்ளார். இவரது குடும்ப சூழ்நிலையை மனதில் கொண்டு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பரிந்துரையின் பெயரில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் அவர்கள் வழங்கி வரும் நலிந்த தொழிலாளர்களுக்கான நிதி உதவியின் கீழ் தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பனை நேரில் வரவழைத்து ₹1,00,000/- ரூபாய் நிதி உதவியை வழங்கி உதவியுள்ளனர்.
ஆட்டோ ஓட்டுநர் இதையையே முன் பணமாக வைத்து தனது பெயரில் சொந்தமாக ஓர் ஆட்டோ எடுத்து தற்போது அதன் மூலமாக தொழில் செய்து வருகிறார். அதிமுக சார்பாக வழங்கப்பட்டுள்ள இந்த நிதி உதவியை தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு காரணமாக இருந்த மாவட்ட செயலாளர் சண்முகநாதனுக்கும் வாழ்த்துக்கள் குவிந்த வன்னம் உள்ளது.
சங்கர பாண்டியன்Nov 29, 2024 - 03:04:49 PM | Posted IP 172.7*****