» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி திருவிக நகர் பகுதியில் மேயர் ஆய்வு

சனி 23, நவம்பர் 2024 2:57:55 PM (IST)



தூத்துக்குடி திருவிக நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணிகள் மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருவிக நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் நடவடிக்கைகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்பொழுது அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சில கோரிக்கைகளை முன் வைத்தார்கள். அவைகளையும் வருங்காலங்களில் நிறைவேற்றி தருகிறேன் என்று மேயர் தெரிவித்தார். ஆய்வின் போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட செயலாளர் செல்வராஜ், பகுதி பிரதிநிதி ஜய்யப்பன், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors




Arputham Hospital




Thoothukudi Business Directory