» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ரியல் எஸ்டேட் அதிபர் விஷம் குடித்து தற்கொலை

சனி 23, நவம்பர் 2024 12:00:58 PM (IST)

தட்டார்மடம் அருகே தொழிலில் அதிக நஷ்டம் ஏற்பட்டதால், ரியல் எஸ்டேட் அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சங்கராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருஸ்முத்து மகன் ஜெயக்குமார் (46), இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தொழிலில் அதிக நஷ்டம் ஏற்படவே வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் மதுபானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீன்குமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors





Arputham Hospital



Thoothukudi Business Directory