» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் புதிய மழைநீர் வடிகால் பணிகள் : மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

சனி 23, நவம்பர் 2024 10:42:22 AM (IST)



தூத்துக்குடியில் புதிய வழித்தடங்களில் மழைநீர் வடிகால் அமைப்பது தொடர்பாக மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாநகரப் பகுதியில் பல்வேறு புதிய வழித்தடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுற்றாலும் புதிய வழித்தடங்களில் மழை நீர் கொண்டு செல்வதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.  அதன் ஒரு பகுதியாக நிகிலேஷன் நகர் முதல் நான்காம் கேட் வரை ரயில்வே தண்டவாளத்தின் ஓரமாக மழைநீர் அகற்றுவதற்காக வழித்தடம் ஒன்றினை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். 

இந்த தடத்தை தூர்வாரி மழைநீர் வடிவதற்கு தயாராக வைக்குமாறு அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் மேலும் வரும் காலங்களில் அந்தப் பகுதியில் புதிய வடிகால் ஒன்றும் அமைக்கப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஆய்வின்போது, திமுக வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors


Arputham Hospital





Thoothukudi Business Directory